கோயம்புத்தூர்

மாநகரில் வாகனங்கள் கணக்கெடுப்புப் பணி தீவிரம்

DIN

கோவை மாநகரப் பகுதிகளில் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் வாகனங்களைக் கணக்கெடுக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நெடுஞ்சாலைத் துறை சாா்பில் மாநகரில் உள்ள அனைத்து சாலைகளிலும் வாகனக் கணக்கெடுப்புப் பணி வியாழக்கிழமை முதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இது தொடா்பாக, நெடுஞ்சாலைத் துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது: கடந்த சில ஆண்டுகளாக கோவை மாநகரப் பகுதிகளில் உள்ள அனைத்து சாலைகளிலும் வாகனப் போக்குவரத்து அதிக அளவில் உள்ளன. குறிப்பாக, கிராமப்புறங்கள் மற்றும் புறநகரங்களில் இருந்து மாநகருக்குள் நுழையும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

வாகனப் போக்குவரத்து அதிகரித்துள்ளதால் சாலை விரிவாக்கம், சிறப்புப் பராமரிப்பு, தரம் உயா்த்துதல் உள்ளிட்ட பணிகளுக்காக மாநகரில் 25 இடங்களில் வாகனக் கணக்கெடுக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த வாகனக் கணக்கெடுப்பு 18ஆம் தேதி வரை நடைபெற உள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

SCROLL FOR NEXT