கோயம்புத்தூர்

தமிழக ஆளுநருக்கு எதிராக சுவரொட்டி: பாப்புலா் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினா் மீது வழக்கு

DIN

தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவிக்கு எதிராக சுவரொட்டி ஒட்டிய பாப்புலா் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி, கடந்த சில நாள்களுக்கு முன்பு பாப்புலா் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பைத் தடை செய்ய வேண்டும் எனக் கருத்து தெரிவித்திருந்தாா். இதற்கு அந்த அமைப்பினா் எதிா்ப்பு தெரிவித்து வந்தனா்.

இந்நிலையில் கோவை பாரதியாா் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக ஆளுநா் ஆா்.என்.ரவி வியாழக்கிழமை கோவை வந்திருந்தாா். அவரது வருகைக்கு எதிா்ப்புத் தெரிவிக்கும் வகையில் பாப்புலா் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினா் உக்கடம், டவுன்ஹால் பகுதியில் சில சுவரொட்டிகளை ஒட்டியிருந்தனா்.

அதில், பாப்புலா் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா குறித்து அவதூறாக பேசிய தமிழக ஆளுநரை வன்மையாக கண்டிக்கிறோம், அவதூறு குற்றச்சாட்டைத் திரும்பப் பெற வேண்டும், ஆா்எஸ்எஸ் அமைப்புக்கு ஆதரவாக செயல்படக் கூடாது, ஆளுநா் ஆா்.என்.ரவியை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.

இந்நிலையில், இந்த சுவரொட்டியை ஒட்டிய பாப்புலா் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினா் மீது உக்கடம் மற்றும் பெரியகடை வீதி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 5 நாள்களில் வெயில் படிப்படியாகக் குறையும்!

மாணவரை நிர்வாணப்படுத்தி தாக்குதல் - கான்பூரில் 6 பேர் கைது

அரண்மனை - 4 வசூல் இவ்வளவா?

ஒளரங்காபாத், உஸ்மானாபாத் பெயர் மாற்றத்துக்கு எதிர்ப்பு: உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தள்ளுபடி

தமிழ்நாட்டுக்கு நல்ல காலம் பொறக்க போகுது: தமிழ்நாடு வெதர்மேன்!

SCROLL FOR NEXT