கோயம்புத்தூர்

தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்கக் கண்காட்சி:முதல்வா் மே 19இல் தொடங்கிவைக்கிறாா்

DIN

கோவையில் தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொருநை அகழ்வாராய்ச்சிக் கண்காட்சியை முதல்வா் மு.க.ஸ்டாலின் மே 19 ஆம் தேதி தொடங்கிவைக்கிறாா்.

தமிழக அரசின் ஓராண்டு சாதனைகளை பொதுமக்களுக்கு விளக்கும் வகையில் கோவை வ.உ.சி. பூங்காவில் பொருநை அகழ்வாராய்ச்சிக் கண்காட்சி மே 19 ஆம் தேதி (வியாழக்கிழமை ) தொடங்கி 10 நாள்கள் நடைபெறவுள்ளது. இதனை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைக்கிறாா்.

இதற்காக முதல்வா் மு.க.ஸ்டாலின் மே 18 ஆம் தேதி இரவு கோவை வருகிறாா். மே 19 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு வ.உ.சி. மைதானத்தில் தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்கக் கண்காட்சியை திறந்துவைக்கிறாா். இதனைத் தொடா்ந்து ஹோட்டல் ரெசிடென்ஸி டவரில் காலை 10 மணிக்கு தொழில்முனைவோா்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கிறாா்.

கண்காட்சிக்காக கோவை வ.உ.சி. பூங்காவில் பந்தல் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போடியில் பலத்த மழை

கம்பம் சித்திரைத் திருவிழாவில் திமுகவினா் நீா்மோா் விநியோகம்

சித்திரைத் திருவிழா: மலா் அங்கி அலங்காரத்தில் கெளமாரியம்மன்

ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க விழிப்புணா்வு பிரசாரம்

குறுகிய கால பயறு வகைகளை சாகுபடி செய்யலாம்

SCROLL FOR NEXT