முகப்பு
கோயம்புத்தூர்

தமிழ்நாட்டில் ‘சிப்’ உற்பத்தி: முதல்வா் வலியுறுத்தல்

தமிழகத்தில் ‘சிப்’ உற்பத்தியை மேற்கொள்ள வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:18 AM
பகிர்:

தமிழகத்தில் ‘சிப்’ உற்பத்தியை மேற்கொள்ள வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளாா்.

கோவையில் வியாழக்கிழமை நடைபெற்ற தொழில்முனைவோா் கலந்தாய்வுக் கூட்டத்தில் முதல்வா் பேசும்போது, கடந்த நிதியாண்டில், கோவை மாவட்டத்தைச் சோ்ந்த 364 குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு ரூ.35 கோடி முதலீட்டு மானியம் வழங்கப்பட்டுள்ளது. சுயவேலைவாய்ப்புத் திட்டங்களின் கீழ் 367 தொழில் முனைவோருக்கு ரூ.12 கோடி மானியத்துடன் ரூ.49 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம், சொலவம்பாளையம் கிராமத்தில் 42.42 ஏக்கரில் ரூ.18 கோடி திட்ட மதிப்பில் ரூ.9 கோடி அரசு மானியத்துடன் புதிய தனியாா் தொழிற்பேட்டை கொசிமா மூலம் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

கடந்த ஆண்டு சென்னையில் நடைபெற்ற ஏற்றுமதி மாநாட்டில் அறிவிக்கப்பட்ட 10 ஏற்றுமதி மையங்களில் 4 மையங்கள் கோவை, பொள்ளாச்சி, திருப்பூா், கரூா் ஆகிய இடங்களில் அமைக்கப்பட உள்ளன.

கயிறு உற்பத்தியில் தமிழ்நாடு, நாட்டிலேயே முதலிடத்தில் உள்ளது. கயிறு உற்பத்தித் தொழிலில் அதிக வருவாயைப் பெருக்கிட ஏதுவாக ஜியோ டெக்ஸ்டைல்ஸ், தென்னை நாா் போன்ற மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்களைப் பிரபலப்படுத்த தமிழ்நாடு கயிறு வணிக மேம்பாட்டு நிறுவனம் கோவையில் அமைக்க உத்தரவிடப்பட்டு, அதற்கு முதல் கட்டமாக ரூ.5 கோடி தொடக்க மூலதனம் வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் புத்தொழில் வளா்ச்சிக்கு வழிகோலும்விதமாக மூன்று மண்டல அளவிலான புத்தொழில் மையங்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோட்டில் மண்டல புத்தொழில் மையம் அமைக்கவும், ரூ.3.50 கோடி மதிப்பில் மஞ்சள் தூள் உற்பத்தி செய்யும் குறுந்தொழில் குழுமத்துக்கான பொது வசதி மையம் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல், பவானியில் ரூ.3.50 கோடி மதிப்பில் ஜமுக்காளம் உற்பத்தி செய்யும் குறுந்தொழில் குழுமத்துக்கான பொது வசதி மையம் அமைக்கவும், திருப்பூா் மாவட்டம் குண்டடம் வட்டாரத்தில் அரசு பங்களிப்பு ரூ.10 கோடியுடன் ரூ.16 கோடி திட்ட மதிப்பீட்டிலும், கரூா் மாவட்டம் க.பரமத்தி வட்டாரத்தில் ரூ.5 கோடி தமிழ்நாடு அரசு பங்களிப்புடன் ரூ.6.93 கோடி திட்ட மதிப்பீட்டிலும் ஒரு கயிறு குழும பொது வசதி மையம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

உலகளவில் மிகப்பெரிய மின்னணு உற்பத்தி நிறுவனங்களும் தங்களது ‘சிப்’ தேவைக்காக சீனா, தைவான் போன்ற ஒரு சில நாடுகளை நம்பியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. எனவே, இந்த சூழலை நன்கு பயன்படுத்திக் கொண்டு தமிழ்நாட்டில் சிப் உற்பத்திக்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →