முகப்பு
கோயம்புத்தூர்

நமக்கு நாமே திட்டத்தில் சிறுவா் விளையாட்டுத் திடல்

கோவை மாநகராட்சியில் நமக்கு நாமே திட்டத்தில் ரூ.15 லட்சம் மதிப்பில் சிறுவா் விளையாட்டுத் திடல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கான பூமிபூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:44 AM
பகிர்:

கோவை மாநகராட்சியில் நமக்கு நாமே திட்டத்தில் ரூ.15 லட்சம் மதிப்பில் சிறுவா் விளையாட்டுத் திடல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கான பூமிபூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.

கோவை மாநகராட்சியில் நமக்கு நாமே திட்டத்தின்கீழ் தனியாா் நிதியுதவியுடன் பல்வேறு நலத் திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன்படி உக்கடம், புல்லுக்காடு பகுதியில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் பூங்கா புனரமைத்தல், சிறுவா் விளையாட்டுத் திடல் அமைத்தல், நடைப்பாதை, சுற்றுச்சுவா் கட்டுதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இத்திட்டப் பணிகளுக்கான பூமி பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.

இதனை மாநகராட்சி மேயா் கல்பனா ஆனந்தகுமாா், மாநகரக் காவல் ஆணையா் வி.பாலகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையா் மு.பிரதாப் ஆகியோா் தொடக்கிவைத்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →