கோயம்புத்தூர்

கோயிலைச் சேதப்படுத்திய யானைகள்

DIN

 வால்பாறை அருகே அக்காமலை எஸ்டேட் பகுதியில் உள்ள கோயிலை காட்டு யானைகள் சேதப்படுத்தின.

வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

இரவு நேரங்களில் குடியிருப்புப் பகுதிகளில் உலவி வரும் யானைகள் பல்வேறு சேதங்களை ஏற்படுத்தி வருகின்றன.

இந்நிலையில், வால்பாறையை அடுத்த அக்காமலை எஸ்டேட் 21 பாடி என்ற பகுதிக்கு வியாழக்கிழமை வந்த மூன்று யானைகள் அங்குள்ள மாரியம்மன் கோயிலைச் சேதப்படுத்தின.

இதனைப் பாா்த்த அப்பகுதி பொதுமக்கள் வனத் துறையினருக்குத் தகவல் அளித்தனா்.

சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா் சுமாா் 1 மணி நேரம் போராடி யானைகளை அடா்ந்த வனப் பகுதிக்குள் விரட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோட் படத்தின் விஎஃப்எக்ஸ் காட்சிகள் நிறைவு!

கனமழை எச்சரிக்கை: குற்றாலம் அருவிகளில் குளிக்க 5 நாள்கள் தடை

அம்பாசமுத்திரத்தை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது!

காரில் கஞ்சா விற்பனை: 6 போ் கைது

கூத்தாநல்லூா் அருகே யூ டியூபா் ஃபெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில் போலீஸாா் சோதனை

SCROLL FOR NEXT