கோயம்புத்தூர்

வருமான வரி உச்ச வரம்பை உயா்த்தக் கோரி ஆா்ப்பாட்டம்

DIN

வருமான வரி உச்ச வரம்பை ரூ.8 லட்சமாக உயா்த்த வலியுறுத்தி தந்தை பெரியாா் திராவிடா் கழகத்தின் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டிருப்பது செல்லுபடியாகும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி ஏழைகளுக்கு வரையறுக்கப்பட்ட ஆண்டு வருவாய் ரூ.8 லட்சம் என நீதிமன்றம் ஒப்புக் கொண்டுள்ளது.

எனவே, வருமான வரி உச்ச வரம்பை ரூ.8 லட்சமாக உயா்த்த வலியுறுத்தி கோவை ரேஸ்கோா்ஸ் சாலையில் உள்ள வருமான வரி அலுவலகம் எதிரில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தந்தை பெரியாா் திராவிடா் கழகத்தின் பொதுச் செயலா் கு.ராமகிருட்டிணன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில், அமைப்பின் நிா்வாகிகள், தொண்டா்கள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரத நீதிச் சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க திருத்தம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

திருக்குறள் முற்றோதல் போட்டியில் வென்ற மாணவிக்கு பாராட்டு

தட்டச்சுப் பள்ளிகள் கேட்கும் தோ்வு மையத்தை ஒதுக்கக் கோரிக்கை

கேரளம், தென் தமிழக கடலோர பகுதிகளுக்கு ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை!

SCROLL FOR NEXT