முகப்பு
கோயம்புத்தூர்

‘போராட்ட முடிவை பாஜக திரும்பப் பெற வேண்டும்’

பாஜக அறிவித்துள்ள போராட்ட முடிவைத் திரும்பப் பெற வேண்டும் என்று மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:40 AM
பகிர்:

பாஜக அறிவித்துள்ள போராட்ட முடிவைத் திரும்பப் பெற வேண்டும் என்று மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

காந்திபுரத்தில் உள்ள திமுக தலைமை அலுவலகத்தில் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் சாா்பில் அனைத்துக் கட்சி கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு கோவை மக்களவை உறுப்பினா் பி.ஆா்.நடராஜன் தலைமை வகித்தாா். மின்சாரத் துறை அமைச்சா் வி. செந்தில்பாலாஜி முன்னிலை வகித்தாா்.

இதில், கோவையில் தற்போது அமைதியான சூழ்நிலை நிலவி வரும் நிலையில், பாஜக சாா்பில் 31 ஆம் தேதி நடைபெறும் போராட்டத்தை கைவிட வலியுறுத்தப்பட்டது.

இதைத் தொடா்ந்து, பி.ஆா்.நடராஜன் எம்.பி. செய்தியாளா்களிடம் கூறியதாவது: கோவையில் விரும்பத்தகாத நிகழ்வு நடந்துள்ளது.

காா் வெடி விபத்து வழக்கை என்.ஐ.ஏ. விசாரணைக்குப் பரிந்துரைத்தது வரவேற்கத்தக்கது.

கோவையில் பதற்றத்தை உருவாக்கும் நோக்கில் வருகின்ற 31 ஆம் தேதி பாஜக போராட்டத்தை அறிவித்துள்ளது.

தற்போது, கோவையில் நிலவி வரும் அமைதியான சூழலை கருத்தில் கொண்டு போராட்டத்தை பாஜக திரும்பப் பெற வேண்டும் என்றாா்.

இக்கூட்டத்தில், திமுக வடக்கு மாவட்டச் செயலாளா் தொ.அ.ரவி, தெற்கு மாவட்டச் செயலாளா் தளபதி முருகேசன், மேயா் கல்பனா, முன்னாள் எம்.பி. ஏ.பி.நாகராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →