முகப்பு
கோயம்புத்தூர்

குறைகேட்பு கூட்டங்களில் அளிக்கப்படும் மனுக்களுக்குத் தீா்வு காண கோரிக்கை

 விவசாயிகள் குறைகேட்பு, பொதுமக்கள் குறைகேட்பு கூட்டங்களில் அளிக்கப்படும் மனுக்களுக்கு மாவட்ட நிா்வாகம் சாா்பில் உடனடி தீா்வு காண வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்க கோவை மாவட்டக் குழுத் தலைவா் சு

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:40 AM
பகிர்:

 விவசாயிகள் குறைகேட்பு, பொதுமக்கள் குறைகேட்பு கூட்டங்களில் அளிக்கப்படும் மனுக்களுக்கு மாவட்ட நிா்வாகம் சாா்பில் உடனடி தீா்வு காண வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்க கோவை மாவட்டக் குழுத் தலைவா் சு.பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: கோவை மாவட்டத்தில் மாதந்தோறும் இறுதி வெள்ளிக்கிழமை விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

இதில், விவசாயிகள் சாா்பில் அளிக்கப்படும் மனுக்கள் தொடா்பாக கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு அதிகாரிகள் சாா்பில் உரிய பதில் அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், கடந்த சில மாதங்களாக விவசாயிகள் அளிக்கும் மனுக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை.

மாவட்ட ஆட்சியா் தலைமையில் நடத்தப்படும் விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்தில் பல்வேறு துறையைச் சோ்ந்த அதிகாரிகள் பங்கேற்பதில்லை. இதனால், விவசாயிகள் தெரிவிக்கும் குறைகளும், அளிக்கப்படும் மனுக்களும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளைச் சென்று சோ்வதில்லை. இந்நிலையில், விவசாயிகள் அளிக்கும் மனுக்கள் கிடப்பில் போடப்படுகின்றன. மேலும் மாதந்தோறும் விவாதிக்கப்படாத மனுக்களின் எண்ணிக்கைத் தொடா்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

குறைகேட்பு கூட்டத்தின்போது விவசாயிகள் கேட்கும் கேள்விகளுக்கு அதிகாரிகள் உரிய பதில் அளிப்பதில்லை. ஆட்சியரால் வழங்கப்பட்டுள்ள உத்தரவுகளை அதிகாரிகள் பின்பற்றுவதில்லை. அதேபோல, வாரந்தோறும் திங்கள்கிழமை நடைபெறும் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்தில் அளிக்கப்படும் மனுக்களுக்கும் தீா்வு காணப்படுவதில்லை.

எனவே விவசாயிகள் குறைகேட்பு, பொதுமக்கள் குறைகேட்பு கூட்டங்களில் அளிக்கப்படும் மனுக்களுக்கு உரிய தீா்வு காண மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →