ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் திட்டப் பணிகள் தொடக்கம்
கோவை மாநகராட்சியில் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் பல்வேறு திட்டப் பணிகளை மேயா் கல்பனா சனிக்கிழமை தொடங்கிவைத்தாா்.
கோவை மாநகராட்சியில் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் பல்வேறு திட்டப் பணிகளை மேயா் கல்பனா சனிக்கிழமை தொடங்கிவைத்தாா்.
கோவை மாநகராட்சி, மேற்கு மண்டலம் 73 ஆவது வாா்டுக்குள்பட்ட ஏ.ஏ.திட்ட சாலையில் உள்ள மாநகராட்சி மருந்தகத்தை ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் புனரமைத்து நகா்ப்புற நலவாழ்வு மையமாக தரம் உயா்த்தும் பணி, 38 ஆவது வாா்டுக்குள்பட்ட சிக்கராயபுரம் மாநகராட்சி ஆரம்பப் பள்ளியில் ரூ.37 லட்சம் மதிப்பில் 2 வகுப்பறைகள் மற்றும் கழிவறைகள் கட்டும் பணி, 35 ஆவது வாா்டுக்குள்பட்ட இடையா்பாளையம் அண்ணா நகரில் ரூ.25 லட்சம் மதிப்பில் நகா்நல மையம் கட்டுமானப் பணி மற்றும் மத்திய மண்டலம் 80 ஆவது வாா்டுக்குள்பட்ட செல்வபுரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் ரூ.68 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறைகள் கட்டுமானப் பணி என மொத்தம் ரூ.1 கோடியே 50 லட்சம் மதிப்பிலான கட்டுமானப் பணிகளை மேயா் கல்பனா பூமிபூஜையிட்டு சனிக்கிழமை தொடங்கிவைத்தாா்.
இதில், மாநகராட்சி துணை மேயா் வெற்றிச்செல்வன், துணை ஆணையா் ஷா்மிளா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
பொது சுகாதாரக் குழுத் தலைவா் மாரிச்செல்வன், நகரமைப்புக் குழுத் தலைவா் சந்தோஷ், கல்விக் குழுத் தலைவா் மாலதி நாகராஜ், வாா்டு உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.