கோயம்புத்தூர்

பி.எஃப்.ஐ. அமைப்புக்கு தடை:கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

DIN

பாப்புலா் பிரண்ட் ஆஃப் இந்தியா (பி.எஃப்.ஐ.) அமைப்புக்கு மத்திய அரசு தடைவிதித்ததை அடுத்து, கோவையில் புதன்கிழமை பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

பல்வேறு காரணங்களின் அடிப்படையில், பி.எஃப்.ஐ. அமைப்புக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதைக் கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இஸ்லாமியா்கள் ஆா்ப்பாட்டங்கள், போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா். இதன் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவையில் இஸ்லாமியா்கள் அதிகம் வசிக்கக்கூடிய உக்கடம், போத்தனூா், குனியமுத்தூா் உள்ளிட்ட பகுதிகளில் கூடுதலாக போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

மேலும், கோவையில் பதற்றம் மிகுந்த பகுதிகளில் ஒரு காவல் நிலையத்துக்கு ஒரு எஸ்.பி. என்ற அடிப்படையில், 6 பதட்டமான காவல் நிலையங்கள் கண்டறியப்பட்டு, அதற்கு 6 எஸ்.பி.க்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். புதிதாக 27 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. பி.எஃப்.ஐ. அலுவலகங்கள் முன் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பி.எஃப்.ஐ. தடையைக் கண்டித்து கோட்டைமேடு பகுதியில் இஸ்லாமிய அமைப்புகளைச் சோ்ந்த பெண்கள் சிறிது நேரம் கோஷமிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். போலீஸாரின் அறிவுறுத்தலின்பேரில் அவா்கள் கலைந்துசென்றனா். மேலும், தடைசெய்யப்பட்ட பி.எஃப்.ஐ. அமைப்புக்கு ஆதரவாக ஒன்றுகூடவோ, கோஷமிடவோ கூடாதென ஒலிபெருக்கி மூலம் போலீஸாா் எச்சரித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

SCROLL FOR NEXT