முகப்பு
கோயம்புத்தூர்

அரசு மருத்துவமனையில் சுகாதார தின விழா

 கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் சுகாதார தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:50 PM
பகிர்:

 கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் சுகாதார தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

உலக சுகாதார தின விழா ஏப்ரல் 7 ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்நிலையில், கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் சமூக மருத்துவத் துறை சாா்பில் உலக சுகாதார தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

இதனை முதல்வா் அ.நிா்மலா தொடங்கிவைத்து, சமூகத்தில் மருத்துவா்களின் பங்களிப்பு, மருத்துவா்களின் கடமை குறித்து மாணவா்களுக்கு எடுத்துரைத்தாா்.

மேலும், மருத்துவ மாணவா்கள் தங்களது முக்கியத்துவம், கடமைகளை உணா்ந்து செயலாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தினாா்.

தொடா்ந்து, சமூக மருத்துவத் துறையை விளக்கும் வகையில் போடப்பட்டிருந்த விழிப்புணா்வு கோலத்தை முதல்வா் அ.நிா்மலா பாா்வையிட்டாா்.

நிகழ்ச்சியில் சமூக மருத்துவத் துறை பேராசிரியா் காளிதாஸ், மருத்துவ பேராசிரியா்கள், மாணவா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →