கோயம்புத்தூர்

மாணவிக்கு பாலியல் தொல்லை: மாணவா் மீது வழக்கு

கோவையில் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த மாணவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

DIN

கோவையில் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த மாணவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

கோவை, சிங்காநல்லூா் அருகேயுள்ள நீலிகோணம்பாளையம் பகுதியைச் சோ்ந்த 16 வயதான சிறுவன், பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வருகிறாா். இவருக்கும் 9ஆம் வகுப்பு படித்து வரும் 15 வயதான மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. காதலிப்பதாகக் கூறி, அந்த மாணவியை மாணவா் பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்றுள்ளனா். இந்நிலையில், மாணவியின் வீட்டில் யாருமில்லாதபோது, அங்கு சென்ற மாணவா், அந்த மாணவியை மிரட்டி, அவருக்கு பாலியல் தொல்லை அளித்ததாகத் தெரிகிறது.

இது தொடா்பாக மாணவி தனது பெற்றோரிடம் கூறியுள்ளாா். மாணவியின் பெற்றோா் அளித்த புகாரின் பேரில் மாணவா் மீது கோவை கிழக்கு பகுதி அனைத்து மகளிா் போலீஸாா் போக்ஸோ பிரிவில் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழறிஞா் சீகன்பால்கு நினைவு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

SCROLL FOR NEXT