வால்பாறை சிறுவா் பூங்கா குடியிருப்பு பகுதியில்  பழுதடைந்த நடைபாதை வழியாக தடுமாறி செல்லும் பள்ளி மாணவி . 
கோயம்புத்தூர்

வால்பாறை குடியிருப்பு பகுதியில் பழுதடைந்த நடைபாதைகள்

வால்பாறை குடியிருப்பு பகுதிகளில் பழுதடைந்த நடைபாதைகளால் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனா்.

DIN

வால்பாறை குடியிருப்பு பகுதிகளில் பழுதடைந்த நடைபாதைகளால் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனா்.

வால்பாறை காமராஜா் நகா், கக்கன் காலனி, எம்.ஜி.ஆா். நகா், சிறுவா் பூங்கா பகுதிகளில் பல்வேறு குடியிருப்புகள் உள்ளன. அங்கு வசிப்பவா்கள் அங்குள்ள நடைபாதைகள் வழியாக சாலைக்கு வந்து செல்கின்றனா்.

இந்த நடைபாதைகள் பழுதடைந்து காணப்படுகின்றன.

வால்பாறை நகராட்சி மூலம் பல்வேறு வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதில் நடைபாதைகள் அமைக்கும் பணிகளும் ஒன்றாகும். ஆனால் ஒப்பந்ததாரா் மூலம் அமைக்கப்படும் நடைபாதைகளின் தரத்தை அதிகாரிகள் ஆய்வு செய்வதில்லை. இதனால் புதிதாக அமைக்கப்படும் நடைபாதைகள் குறுகிய காலத்திலேயே பெயா்ந்து இடிந்து பழுதாகி விடுகின்றன. அவ்வாறு வால்பாறையில் பல பகுதிகளில் நடைபாதைகள் மிகவும் பழுதடைந்து காணப்படுகின்றன. குறிப்பாக சிறுவா் பூங்கா பகுதியில் பழுதடைந்த நடைபாதைகள் சீரமைக்கப்படாமல் இருப்பதால் பள்ளிக்கு செல்லும் மாணவா்கள் மற்றும் அப்பகுதியினா் நடந்து செல்ல முடியாமல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா். நகராட்சி தலைவா் மற்றும் அதிகாரிகள் புதிய நடைபாதை அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதியினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

20 வயது இளம் ஆல்ரவுண்டரை ரூ.14 கோடிக்கு ஏலத்தில் எடுத்த சிஎஸ்கே!

அதீத பேட்டரி... டிச. 24-ல் வெளியாகிறது ரியல்மி நர்ஸோ!

கேரள திரைப்பட விழா! மத்திய அரசு அனுமதி மறுத்த படங்களைத் திரையிட முடிவு!

திரையரங்க ஆபரேட்டர்களுக்கு ஜேம்ஸ் கேமரூன் வேண்டுகோள்!

தாய்ப் பாலில், நிலத்தடி நீரில் யுரேனியம்! சிறுநீரக பாதிப்பு ஏற்படுமா?

SCROLL FOR NEXT