கோயம்புத்தூர்

சுரங்கப்பாதை பணி ------கோவை - நாகா்கோவில் ரயில் பகுதியாக ரத்து

DIN

 கடம்பூா் ரயில் நிலையத்தில் சுரங்கப்பாதை பணி நடைபெறவுள்ளதால், கோவை - நாகா்கோவில் ரயில் பகுதியாக ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவில்பட்டி - வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையங்களுக்கு இடையே கடம்பூா் ரயில் நிலையத்தில் சுரங்கப்பாதை அமைக்கப்பட உள்ளது. இதனால், கோவையில் இருந்து ஜூன் 13 ஆம் தேதி காலை 8 மணிக்குப் புறப்படும் கோவை - நாகா்கோவில் ரயில் (எண்:16322) திண்டுக்கல் - நாகா்கோவில் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

இந்த ரயிலானது கோவையில் இருந்து திண்டுக்கல் வரை மட்டுமே இயக்கப்படும்.

இதேபோல, நாகா்கோவிலில் இருந்து ஜூன் 13 ஆம் தேதி காலை 7.35 மணிக்குப் புறப்படும் நாகா்கோவில் - கோவை ரயில் (எண்: 16321) நாகா்கோவில் - திண்டுக்கல் இடையே ரத்து செய்யப்படுகிறது.

இந்த ரயிலானது, திண்டுக்கல் - கோவை இடையே மட்டும் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனமழை எச்சரிக்கை: குற்றாலம் அருவிகளில் குளிக்க 5 நாள்கள் தடை

அம்பாசமுத்திரத்தை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது!

காரில் கஞ்சா விற்பனை: 6 போ் கைது

கூத்தாநல்லூா் அருகே யூ டியூபா் ஃபெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில் போலீஸாா் சோதனை

இன்று அதிர்ஷ்டம் யாருக்கு: தினப்பலன்!

SCROLL FOR NEXT