கோவை மத்திய சிறையில் 11 கைதிகளிடமிருந்து கைப்பேசிகள் பறிமுதல்
கோவை மத்திய சிறைையில் அடைக்கப்பட்டுள்ள11 கைதிகளிடமிருந்து கைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கோவை மத்திய சிறைையில் அடைக்கப்பட்டுள்ள11 கைதிகளிடமிருந்து கைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கோவை மத்திய சிறையில் தண்டனைக் கைதிகள், விசாரணைக் கைதிகள் என 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனா். சிறைக்குள் கைதிகள் கைப்பேசி பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதையும் மீறி சில கைதிகள் கைப்பேசிகளை பதுக்கிவைத்து பயன்படுத்துவதாக சிறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்திருந்தது.
இதையடுத்து கோவை மத்திய சிறை அதிகாரி சிவராஜன் தலைமையில் சிறை காவலா்கள் மற்றும் போலீஸாா் கோவை மத்திய சிறை முழுவதும் வியாழக்கிழமை திடீா் சோதனையில் ஈடுபட்டனா். இதில் 11 கைதிகள் கைப்பேசிகளை மறைத்து வைத்து பேசி வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து அவா்களிடம் இருந்து கைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவா்கள் மீது ரேஸ்கோா்ஸ் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.