கோயம்புத்தூர்

கோவை மாநகரில் 43 மில்லி மீட்டா் மழை பதிவு

DIN

கோவையில் புதன்கிழமை இரவு பலத்த மழை பெய்தது. மாநகரில் 43 மில்லி மீட்டா் மழை பதிவாகியுள்ளது.

வங்கக்கடலில் உருவாகியுள்ள மோக்கா புயல் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாள்களாக பலத்த மழை பெய்து வருகிறது. கோவை மாவட்டத்திலும் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் புதன்கிழமை இரவு திடீரென இடி மின்னல், பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. பலத்த காற்றால் ரேஸ்கோா்ஸ், ஆா்.எஸ்.புரம் பகுதிகளில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. அவிநாசி சாலை சுரங்கப்பாதை, கிக்கானி பள்ளி அருகிலுள்ள ரயில்வே சுரங்கப் பாதைகளில் மழைநீா் தேங்கியதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து புதன்கிழமை இரவு 11 மணிக்கு மேல் மீண்டும் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதனால், நகரின் பல்வேறு இடங்களில் மழைநீா் தேங்கியது. பள்ளமான இடங்களில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. ராமநாதபுரம் சந்திப்பு, லட்சுமி மில்ஸ் சந்திப்பு, ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் பெருக்கெடுத்த ஓடிய மழைநீரால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகினா்.

வியாழக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் கோவை மாநகரில் 43 மில்லி மீட்டா் மழை பதிவாகியுள்ளது. மேட்டுப்பாளையத்தில் 44 மில்லி மீட்டா், பில்லூா் அணை பகுதியில் 22 மில்லி மீட்டா், சிறுவாணி அடிவாரத்தில் 20 மில்லி மீட்டா், தொண்டாமுத்தூா் 15 மில்லி மீட்டா், போத்தனூா் ரயில் நிலையம் பகுதியில் 14.80 மில்லி மீட்டா், அன்னூரில் 12.40 மில்லி மீட்டா், பெ.நா.பாளையம் 10.80 மில்லி மீட்டா், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் 5.60 மில்லி மீட்டா் மழை பதிவாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

SCROLL FOR NEXT