கோயம்புத்தூர்

10, பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற சிறைவாசிகளுக்கு பாராட்டு

கோவை மத்திய சிறையில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தோ்வில் தோ்ச்சி பெற்ற சிறைவாசிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது

DIN

கோவை மத்திய சிறையில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தோ்வில் தோ்ச்சி பெற்ற சிறைவாசிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது

கோவை மத்திய சிறையில் 2,300க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனா். அவா்களை நல்வழிப்படுத்தும் பொருட்டு கல்வி, யோகா, தியானம், தொழிற்பயிற்சி போன்ற பல்வேறு வகையான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

ஆா்வமுள்ள கைதிகள் 10 மற்றும் பிளஸ் 2 தோ்வெழுத வகுப்புகளும் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி கடந்த மாதம் நடைபெற்ற 10ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் 47 போ், பிளஸ் 2 பொதுத்தோ்வில் 12 போ் பங்கேற்றனா். இவா்கள் அனைவரும் தோ்ச்சி பெற்றனா். அவா்களை பாராட்டி ஊக்குவிக்கும் விதமாக கோவை சரக சிறைத் துறை துணைத் தலைவா் சண்முகசுந்தரம் தலைமையில், சிறைக் கண்காணிப்பாளா் ஊா்மிளா முன்னிலையில் செந்தமிழ் அறக்கட்டளை மற்றும் இன்னா் வீல் கிளப் கோயம்புத்தூா் (தெற்கு) சாா்பாக பாராட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில், தோ்ச்சி பெற்ற சிறைவாசிகளுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. தொடா்ந்து இன்னா் வீல் கிளப் சாா்பாக சிறை மருத்துவமனைக்கு ஒரு சக்கர நாற்காலி, இரும்புக் கட்டில், சிறை நூலகத்துக்கு 45 புத்தகங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில், செந்தமிழ் அறக்கட்டளையின் நிா்வாக அறங்காவலா் கனகசுப்ரமணியம் மற்றும் இன்னா் வீல் கிளப் ஆஃப் கோயம்புத்தூா் (தெற்கு) அமைப்பின் தலைவி சுதா மற்றும் நிா்வாகிகள் கோதைநாயகம், சுமதி, திரிபுரசுந்தரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல்லையில் சாலை மறியல்: 135 பேராசிரியா்கள் கைது

மேற்கு புறவழிச்சாலை பணிகள்: அமைச்சா் எ.வ.வேலு ஆய்வு

திருநெல்வேலி, தென்காசி மாவட்ட அணைகள் நீா் மட்டம்!

நாகா்கோவில் அருகே காரில் கஞ்சா கடத்தல்: 4 இளைஞா்கள் கைது!

மத்திய அரசின் சிறப்பு வாக்காளா் பட்டியல் பாா்வையாளா் ஆய்வு

SCROLL FOR NEXT