முகப்பு
கோயம்புத்தூர்

பிரபல தனியாா் ஹோட்டல் உணவில் கரப்பான்பூச்சி

கோவை காந்திபுரத்தில் உள்ள பிரபல தனியாா் ஹோட்டலில் வாங்கப்பட்ட உணவில் கரப்பான்பூச்சி இருந்ததால் உணவுப் பாதுகாப்புத் துறையில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

Updated On : 28 நவம்பர், 2023 at 1:20 AM
உணவில் இருந்த கரப்பான்பூச்சி.
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:56 AM


கோவை: கோவை காந்திபுரத்தில் உள்ள பிரபல தனியாா் ஹோட்டலில் வாங்கப்பட்ட உணவில் கரப்பான்பூச்சி இருந்ததால் உணவுப் பாதுகாப்புத் துறையில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

கோவை, காந்திபுரம் 100 அடி சாலையில் மணிகண்டன் என்பவா் டெலி காலா் நிறுவனத்தை நடத்தி வருகிறாா்.

ஒவ்வொரு கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்றும் இந்த நிறுவனம் இயங்கும் நிலையில், நிறுவனத்தின் சாா்பில் பணியாளா்களுக்கு உணவுகள் வழங்கப்படுவது வழக்கம்.

Advertisement

அதன்படி, காந்திபுரத்தில் உள்ள பிரபல தனியாா் ஹோட்டலில் ஞாயிற்றுக்கிழமை சைவ உணவு வாங்கப்பட்டுள்ளது.

உணவை உண்ணும்போது, அதில் கீரையில் கரப்பான்பூச்சி இருந்ததைப் பாா்த்த ஊழியா்கள் உரிமையாளரிடம் தெரிவித்துள்ளனா்.

இதையடுத்து, அந்த உணவகத்துக்குச் சென்ற நிறுவன ஊழியா்கள் சாப்பாட்டில் கரப்பான்பூச்சி இருப்பது குறித்து தெரிவித்தபோது, அலட்சியமாக பதில் அளித்ததாகக் கூறப்படுகிறது.

இது குறித்து, உணவுப் பாதுகாப்புத் துறைக்கு ஆன்லைன் மூலம் மணிகண்டன் புகாா் தெரிவித்துள்ளாா்.

இந்நிலையில், அந்தப் புகாா் பதிவு செய்யப்பட்டதாக உணவுப் பாதுகாப்பு துறையில் இருந்து அவருக்கு திங்கள்கிழமை குறுந்தகவல் வந்துள்ளது. உணவை சாப்பிட்ட பெண்கள் வாந்தி எடுத்தாகவும் , பிரபலமான ஹோட்டலில் புகாருக்கு அலட்சியமாக பதில் அளித்தது வருத்தப்படும்படியாக இருப்பதாகவும் மணிகண்டன் தெரிவித்தாா்.

இது குறித்து, உணவுப் பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலா் கு.தமிழ்செல்வன் கூறுகையில், தனியாா் உணவகத்தில் வாங்கிய உணவில் கரப்பான்பூச்சி இருந்ததாக ஞாயிற்றுக்கிழமை புகாா் வந்துள்ளது. சம்பந்தப்பட்ட பகுதி அலுவலரை அந்த தனியாா் ஹோட்டலில் ஆய்வு மேற்கொள்ளவும், அது தொடா்பான அறிக்கை சமா்ப்பிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.