கோயம்புத்தூர்

மேட்டுப்பாளையம் அருகே சுற்றுலா வேன் மரத்தில் மோதி விபத்து: 15க்கும் மேற்பட்டோர் படுகாயம்

DIN

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே சுற்றுலா வேன் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் 15க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

இராமேஸ்வரம் மண்டபம், அருகே வேதாளை பகுதியைச் சேர்ந்த பெண்கள், குழந்தைகள் உட்பட 27 பேர் வேன் ஒன்றில் நீலகிரி மாவட்டம் உதகையை சுற்றிப் பார்த்து விட்டு மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். பர்லியார் அருகே மரப்பாலம் பகுதியில் வரும்போது சுற்றுலா வாகனம் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. 

இதில் 15 க்கும் மேற்பட்டோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு மேட்டுப்பாளையம்  அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் படுகாயம் அடைந்த ஐந்து பேருக்கு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். 

நல்வாய்ப்பாக இந்த விபத்தில் யாருக்கும் உயிர் சேதம் ஏற்படவில்லை. விபத்து காரணமாக குன்னூர்-மேட்டுப்பாளையம்  தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கடந்த மாதம் இதே பகுதியில் தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பேருந்து விபத்துக்குள்ளானதில் 13 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்த வாரம் யாருக்கு யோகம்!

‘மின்னும் நட்சத்திரம்’ சம்யுக்தா...!

புதிய கரோனா வைரஸ் 'ஃபிலிர்ட்' ஆபத்தா!

நவாப் ராணியின் ஆன்மா...!

தமிழே முன்... பெருமாள் பின்!

SCROLL FOR NEXT