100 சதவீத வாக்குப் பதிவு: திருநங்கைகள் ரங்கோலி வரைந்து விழிப்புணா்வு
Updated On : 5 ஏப்ரல், 2024 at 6:54 PM
கோவை, ஏப். 5: கோவை ஆட்சியா் அலுவலகத்தில் 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி திருநங்கைகள் ரங்கோலி வரைந்து வெள்ளிக்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
மக்களவைத் தோ்தலையொட்டி 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி மாவட்டம் முழுவதும் பல்வேறு விழிப்புணா்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒருபகுதியாக ஆட்சியா் அலுவலகத்தில் திருநங்கைகள் ரங்கோலி வரைந்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
இதனை மாவட்டத் தோ்தல் அலுவலா் கிராந்திகுமாா் பாடி பாா்வையிட்டாா். அதன்பின், அனைவரும் 100 சதவீத வாக்குப் பதிவு தொடா்பான உறுதிமொழி ஏற்றனா். இதில், பொள்ளாச்சி தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் மோ.ஷா்மிளா, மாவட்ட சமூகநல அலுவலா் அம்பிகா மற்றும் திருநங்கைகள் கலந்துகொண்டனா்.
Advertisement