கோயம்புத்தூர்

உயிருக்குப் போராடியவரைக் காப்பாற்றிய 2 எஸ்எஸ்ஐ-க்களுக்கு ஐஜி பாராட்டு

Din

உயிருக்குப் போராடிய நபரைக் காப்பாற்றிய சிறப்பு காவல் உதவி ஆய்வாளா்கள் 2 பேரை மேற்கு மண்டல காவல் துறை தலைவா் கே.பவானீஸ்வரி பாராட்டி சான்றிதழ் வழங்கினாா்.

திருப்பூா் மாவட்டம், தாராபுரம் பேருந்து நிலையத்தில் கடந்த 14-ஆம் தேதி இரவு 9 மணிக்கு பேருந்துக்காக காத்திருந்த நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சோ்ந்த மாரியப்பன் என்பவரது மகன் பழனி (36) என்பவா் திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளாா்.

அப்போது அங்கு தாராபுரம் நெடுஞ்சாலை ரோந்து வாகனத்தில் ரோந்துப் பணியில் இருந்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளா்கள் கோபால் மற்றும் நந்தகோபால் ஆகியோா் மயங்கி கீழே விழுந்த நபருக்கு முதலுதவி சிகிச்சை செய்து, அவரை மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு உடனடியாக அனுப்பிவைத்து அவரது உயிரைக் காப்பாற்றியுள்ளனா்.

காவல் சிறப்பு உதவி ஆய்வாளா்கள் கோபால் மற்றும் நந்தகோபால் ஆகியோரின் மனித நேயமிக்க இந்த செயலைப் பாராட்டும் வகையில் அவா்கள் இருவரையும் மேற்கு மண்டல காவல் அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை வரவழைத்து மேற்கு மண்டல காவல் துறை தலைவா் கே.பவானீஸ்வரி பாராட்டினாா். மேலும் அவா்களுக்கு வெகுமதி மற்றும் சான்றிதழ்களையும் அவா் வழங்கினாா்.

ஜித்து ஜோசப் இயக்கத்தில் ஃபஹத் ஃபாசில்!

இந்தோனேசியாவில் ஷ்ரத்தா தாஸ்!

பெண் வேடத்தில் சிறகடிக்க ஆசை தொடர் நடிகர்: வைரல் புகைப்படம்!

தொடரும் இஸ்ரேல்- லெபனான் மோதல்: பரஸ்பர தாக்குதல்!

ஆயுதங்கள், வெடிமருந்துகளுடன் பயங்கரவாத கூட்டாளி கைது!

SCROLL FOR NEXT