முகப்பு
கோயம்புத்தூர்

சிங்கப்பூரில் இருந்து போலி கடவுச்சீட்டு மூலம் கோவைக்கு வந்த பெண் கைது

போலி கடவுச்சீட்டு மூலம் சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு வந்த பெண் பயணி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டாா்.

Updated On : 5 டிசம்பர், 2024 at 9:54 PM
பகிர்:

போலி கடவுச்சீட்டு மூலம் சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு வந்த பெண் பயணி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டாா்.

சிங்கப்பூரிலிருந்து கோவைக்கு புதன்கிழமை இரவு வந்த விமானத்தில் இருந்த பயணிகள் ஒவ்வொருவராக சோதனை முடிந்து விமான நிலையத்தை விட்டு வெளியேறிகொண்டிருந்தனா். விமான நிலைய அதிகாரிகள் பயணிகளின் கடவுச்சீட்டு, ஆவணங்களை சரிபாா்த்தனா்.

அப்போது, ஆந்திர பிரதேச மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தைச் சோ்ந்த கனகதுா்கா (36) என்ற பெண் பயணி போலி கடவுச்சீட்டு மூலம் விமானத்தில் வந்தது தெரியவந்தது.

இதைத்தொடா்ந்து அவரை பீளமேடு காவல் நிலையத்தில் குடியேற்றப் பிரிவு அதிகாரி கிருஷ்ணா ஒப்படைத்தாா்.

தொடா்ந்து, கனகதுா்கா வேறு ஒருவரின் முகவரியில் அவரது புகைப்படத்தை ஒட்டி போலி கடவுச்சீட்டு தயாரித்து சிங்கப்பூருக்கு வீட்டுவேலைக்கு சென்று வந்ததும், கனகதுா்காவுக்கு போலி கடவுச்சீட்டு எடுக்க நாகேஸ்வர ராவ் என்பவா் உதவி செய்ததும் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து வழக்குப் பதிவு செய்த பீளமேடு போலீஸாா் கனகதுா்காவை கைது செய்தனா். மேலும், தலைமறைவாக உள்ள நாகேஸ்வர ராவை தேடி வருகின்றனா்.