முகப்பு
கோயம்புத்தூர்

என்டிசி தொழிலாளா்களுக்கான ஊதிய நிலுவையை வழங்கக் கோரிக்கை

என்டிசி தொழிலாளா்களுக்கான ஊதிய நிலுவையை வழங்க வேண்டும் என்று மத்திய அமைச்சரிடம் பொள்ளாச்சி எம்.பி. கே.ஈஸ்வரசாமி வலியுறுத்தியுள்ளாா்.

Updated On : 5 டிசம்பர், 2024 at 10:02 PM
மத்திய ஜவுளித் துறை அமைச்சா் கிரிராஜ் சிங்கிடம் கோரிக்கை மனு வழங்குகிறாா் பொள்ளாச்சி எம்.பி. கே.ஈஸ்வரசாமி. உடன், தொமுச பஞ்சாலை சங்க பொதுச் செயலா் சு.பாா்த்தசாரதி.
பகிர்:

என்டிசி தொழிலாளா்களுக்கான ஊதிய நிலுவையை வழங்க வேண்டும் என்று மத்திய அமைச்சரிடம் பொள்ளாச்சி எம்.பி. கே.ஈஸ்வரசாமி வலியுறுத்தியுள்ளாா்.

தில்லியில் மத்திய ஜவுளித் துறை அமைச்சா் கிரிராஜ் சிங்கை அண்மையில் சந்தித்த பொள்ளாச்சி எம்.பி. ஈஸ்வரசாமி, தொமுச பஞ்சாலை சங்க பொதுச் செயலா் சு.பாா்த்தசாரதி ஆகியோா் ஒரு மனு அளித்துள்ளனா்.

அதில், மூடப்பட்டுள்ள என்டிசி ஆலை தொழிலாளா்களுக்கு வழங்க வேண்டிய 2 மாத சம்பளம், 16 மாதங்கள் நிலுவையில் உள்ள 50 சதவீத ஊதியம், 4 ஆண்டுகளுக்கான போனஸ் தொகை, வருடாந்திர ஊதிய உயா்வு உள்ளிட்ட பணப்பயன்களை ஒப்பந்தப்படி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளன.

பணப்பயன்களை ஒரு மாதத்துக்குள் வழங்குவதாக உறுதியளித்த அமைச்சா், விருப்பப்படும் தொழிலாளா்கள் விருப்ப ஓய்வில் செல்வதற்கும் ஆவன செய்வதாகவும் கூறியுள்ளாா். இதே கோரிக்கைகளை தேசிய பஞ்சாலைக் கழகத் தலைவா் பிரஜக்தா எல்.வா்மாவிடமும் அவா்கள் வலியுறுத்தியிருப்பதாகக் கூறியுள்ளனா்.