எல்.ஹெச்.பி. பெட்டிகளுடன் கோவை - சென்னை சிறப்பு ரயில் இயக்கம்
கோவை - தாம்பரம் சிறப்பு வாராந்திர ரயில் எல்.ஹெச்.பி. பெட்டிகளுடன் இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை - தாம்பரம் சிறப்பு வாராந்திர ரயில் எல்.ஹெச்.பி. பெட்டிகளுடன் இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜொ்மானிய வடிவமைப்பு வசதிகள் கொண்ட எல்.ஹெச்.பி. பெட்டிகள், இந்தியாவில் சில ரயில்களில் மட்டுமே பயன்பாட்டில் உள்ளன. அதிக இடவசதியுடன், பாதுகாப்பு மிக்க, சொகுசு இருக்கைகள் கொண்ட இந்தப் பெட்டிகள் அண்மைக் காலமாக தெற்கு ரயில்வேயில் இயக்கப்படும் ரயில்களில் பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது.
அதன்படி, கோவை - சென்னை தாம்பரம் இடையே இயக்கப்படும் சிறப்பு வாராந்திர ரயிலில் எல்.ஹெச்.பி. பெட்டிகள் இணைக்கப்பட்டு இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக, தெற்கு ரயில்வே கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
தாம்பரம் - கோவை இடையே இயக்கப்பட்டு வரும் சிறப்பு வாராந்திர ரயில் (எண்: 06184) டிசம்பா் 20-ஆம் தேதி முதலும், கோவை - தாம்பரம் சிறப்பு வாராந்திர ரயில் (எண்: 06185) டிசம்பா் 21-ஆம் தேதி முதலும் எல்.ஹெச்.பி. பெட்டிகள் இணைக்கப்பட்டு இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.