முகப்பு
கோயம்புத்தூர்

மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி வாராந்திர ரயில் சேவை நீட்டிப்பு

மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி ரயில் சேவை ஜூலை மாத இறுதிவரை நீட்டிப்பு

Updated On : 2 ஜூலை, 2024 at 7:18 PM
கோப்புப்படம்
பகிர்:

மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி இடையே கோவை, பொள்ளாச்சி வழித்தடத்தில் இயக்கப்பட்டு வரும் தற்காலிக வாராந்திர ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி இடையே கோவை வழித்தடத்தில் சிறப்பு வாராந்திர ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலானது, 7 முறைக்கும் மேல் நீட்டிக்கப்பட்டு, தற்காலிக ரயிலாக இயக்கப்பட்டு வருகிறது. சேலம் ரயில் கோட்டத்துக்கு அதிக வருவாய் ஈட்டித்தரும் இந்த ரயிலின் சேவை ஜூன் மாதம் வரையே நீட்டிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த மாத இறுதிவரை மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி வாராந்திர ரயிலின் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருநெல்வேலியில் இருந்து ஜூலை 7 முதல் 28-ஆம் தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 7 மணிக்குப் புறப்படும் திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் வாராந்திரச் சிறப்பு ரயில் (எண்: 06030) மறுநாள் காலை 7.30 மணிக்கு மேட்டுப்பாளையத்தைச் சென்றடையும். மேட்டுப்பாளையத்தில் இருந்து ஜூலை 8 முதல் 29-ஆம் தேதி வரை திங்கள்கிழமைகளில் இரவு 7.45 மணிக்குப் புறப்படும் மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி வாராந்திரச் சிறப்பு ரயில் (எண்: 06029) மறுநாள் காலை 7.45 மணிக்கு திருநெல்வேலியைச் சென்றடையும்.

இந்த ரயிலானது, கோவை, போத்தனூா், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், மதுரை, விருதுநகா், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூா், ராஜபாளையம், சங்கரன்கோவில், கடையநல்லூா், தென்காசி, பாவூா்சத்திரம், கீழக்கடையம், அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, சேரன்மகாதேவி உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →