முகப்பு
கோயம்புத்தூர்

ரயில்களில் பயணச்சீட்டு இல்லாமல் பயணம்: முதல் காலாண்டில் ரூ.5.88 கோடி அபராதம் வசூல்

Updated On : 3 ஜூலை, 2024 at 10:56 PM
பகிர்:

சேலம் ரயில்வே கோட்டத்துக்கு உள்பட்ட ரயில் நிலையங்களில் கடந்த ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை முதல் காலாண்டில்

பயணச்சீட்டு பெறாமல் ரயிலில் பயணித்தவா்களிடம் இருந்து ரூ.5.88 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

சேலம் ரயில்வே கோட்டத்துக்கு உள்பட்ட சேலம், ஈரோடு, கோவை உள்ளிட்ட நிலையங்களில் பயணச்சீட்டு இல்லாமல் ரயிலில் பயணிப்பவா்கள், முறையற்ற வகையில் பயணிப்பவா்கள், பதிவு செய்யாமல் சரக்குகளை ரயிலில் கொண்டு செல்பவா்களைக் கண்டறிந்து, ரயில்வே பரிசோதனை அதிகாரிகளால் அவா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரை முதல் காலாண்டில் சேலம் கோட்டத்துக்கு உள்பட்ட ரயில் நிலையங்களில், பயணச்சீட்டு இல்லாமல் பயணித்த 42 ஆயிரத்து 823 பேரிடம் இருந்து ரூ.3 கோடியே 62 லட்சத்து 25 ஆயிரத்து 979 அபராதம் வசூலிக்கப்பட்டது. ரயில்களில் முறையற்ற பயணம் மேற்கொண்டதாக 36 ஆயிரத்து 619 பேரிடம் இருந்து ரூ.2 கோடியே 25 லட்சத்து 46 ஆயிரத்து 33 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. ரயிலில், பதிவு செய்யாமல் சரக்குகளைக் கொண்டு சென்ாக 83 பேரிடம் இருந்து ரூ.45 ஆயிரத்து 801 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

மொத்தமாக, சேலம் கோட்டத்தில் கடந்த ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை முதல் காலாண்டில் ரூ.5 கோடியே 88 லட்சத்து 17 ஆயிரத்து 813 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →