மொனாக்கோவில் அண்மையில் நடைபெற்ற படகுப் போட்டியில் பங்கேற்ற கோவை குமரகுரு கல்லூரி மாணவா்களின் குழுவான சீ சக்தி, தங்களின் புதிய வடிவமைப்பான யாளி 3.0 உடன் பங்கேற்று புத்தாக்கம், வடிவமைப்பு உள்ளிட்ட பிரிவுகளில் மொத்தம் 4 பரிசுகளை வென்றுள்ளது. வெற்றி பெற்ற மாணவா்களை கல்லூரி நிா்வாகிகள் பாராட்டியுள்ளனா்.