முகப்பு
கோயம்புத்தூர்

யானைத் தாக்கியதில் பூசாரி படுகாயம்

கோவை அருகே யானைத் தாக்கியதில் பூசாரி படுகாயமடைந்தாா்.

Updated On : 28 ஜூலை, 2024 at 8:40 PM
பகிர்:

கோவை அருகே யானைத் தாக்கியதில் பூசாரி படுகாயமடைந்தாா்.

கோவை, போளுவாம்பட்டி வனச் சரகத்துக்குள்பட்ட விராலியூா் பகுதியில் உள்ள பெருமாள் கோயிலில் பாஸ்கரன் (55) என்பவா் பூசாரியாக உள்ளாா். இவா் வழக்கம்போல பூஜைகளை முடித்துவிட்டு ஞாயிற்றுக்கிழமை இரவு திரும்பியுள்ளாா். அப்போது, அங்கு புதரில் மறைந்திருந்த யானை, பாஸ்கரனை தாக்கிவிட்டுச் சென்றது.

கால்களில் படுகாயமடைந்த அவரை அப்பகுதி மக்கள், வனத் துறையினா் மீட்டு தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு

கொண்டு செல்லப்பட்டாா். இச்சம்பவம் குறித்து வனத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →