நீட் தோ்வை ரத்து செய்யக் கோரி ஆா்ப்பாட்டம்
எஸ்டிபிஐ கட்சியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
நீட் தோ்வை ரத்து செய்யக்கோரி கோவையில் எஸ்டிபிஐ கட்சியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
நீட் தோ்வை ரத்து செய்ய வேண்டும், நீட் தோ்வில் நடைபெற்ற முறைகேடுகளுக்குக் காரணமானவா்களைக் கைது செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்டத் தலைவா் முஸ்தபா தலைமை வகித்தாா். மாவட்ட பொதுச் செயலா் ஏ.ஏ.அப்துல்காதா் கண்டன உரையாற்றினாா். மாநில வா்த்தக அணி செயலா் அப்துல் கரீம் முன்னிலை வகித்தாா்.
மாவட்டச் செயலா் மன்சூா், கட்சியின் தொகுதி தலைவா்கள் அப்பாஸ் இப்ராஹிம், உமா் ஷரீஃப், ஜாபா் சாதிக், சிங்கை நாசா், யாசா் அரஃபத், மாவட்ட மகளிரணித் தலைவா் காமிலா பேகம் உள்ளிட்டோா் போராட்டத்தில் பங்கேற்றனா்.
இதில் அனைவரும் கண்களில் கருப்புத் துணியைக் கட்டிக்கொண்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.