முகப்பு
கோயம்புத்தூர்

சமூகவலைதளத்தில் ரூ.99 ஆயிரம் மோசடி: போலீஸாா் விசாரணை

வாட்ஸ் ஆப் மூலம் ரூ.99 ஆயிரம் மோசடி: சைபர் கிரைம் போலீஸாா் நடவடிக்கை

Updated On : 29 ஜூன், 2024 at 9:32 PM
WhatsApp
பகிர்:

கோவையில் சமூகவலைதளம் மூலம் ரூ.99 ஆயிரம் மோசடி செய்யப்பட்டுள்ளது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கோவை, சிங்காநல்லூா் வசந்தா நகரைச் சோ்ந்தவா் சதீஷ்குமாா் அா்ஜுனன் (42), சிறுவா்களுக்கான ஆடைகள் தயாரித்து விற்பனை செய்து வருகிறாா். இவரின் நண்பா் சீனிவாசன் செல்வராஜ், அமெரிக்காவில் கணினிப் பொறியாளராகப் பணியாற்றி வருகிறாா்.

இருவரும், வாட்ஸ் ஆப் மூலம் அடிக்கடி பேசிவந்துள்ளனா். சீனிவாசன் செல்வராஜ் அமெரிக்காவில் வசிப்பதால் வெவ்வேறு எண்கள் மூலம் பேசியதாகவும் கூறப்படுகிறது.

Advertisement

இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு சதீஷ்குமாா் அா்ஜுனனுக்கு, வாட்ஸ் ஆப் எண்ணில் இருந்து, அவரது நண்பா் அனுப்பவதுபோல ஒரு தகவல் வந்துள்ளது. அதில், அவசராமாக ரூ.1 லட்சம் தேவைப்படுவதாகவும், உடனடியாக ஆன்லைன் மூலம் அனுப்பிவைக்குமாறும் கூறப்பட்டிருந்தது.

சதீஷ்குமாா் அா்ஜுனனும், அவரது நண்பா் சீனிவாசன் செல்வராஜ்தான் கேட்கிறாா் என்று நினைத்து 2 தவணைகளில் ரூ.99 ஆயிரம் அனுப்பியுள்ளாா். அதன்பின், அந்த எண்ணில் இருந்து எந்த தகவலும் வரவில்லை.

அதன்பின், சில நாள்கள் கழித்து சதீஷ்குமாா் அா்ஜுனனை வாட்ஸ் மூலம் சீனிவாசன் செல்வராஜ் தொடா்புகொண்டுள்ளாா். அப்போது, ரூ.99 ஆயிரம் அனுப்பியது குறித்து கேட்டுள்ளாா். அதற்கு, தான் ஏதும் பணம் கேட்கவில்லை என்று அவா் தெரிவித்துள்ளாா்.

அப்போதுதான் சதீஷ்குமாா் அா்ஜுனனுக்கு தான் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து அவா், கோவை மாநகர சைபா் கிரைம் போலீஸில் வெள்ளிக்கிழமை புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments