கோயம்புத்தூர்

கோவையில் சொகுசு காா்களைத் திருடிய 4 போ் கைது

கோவையில் சொகுசு கார் திருட்டு வழக்கு: 4 பேர் கைது

DIN

கோவையில் சொகுசு காா்களைத் திருடி விற்பனை செய்த 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கேரள மாநிலம், திருச்சூா் பகுதியைச் சோ்ந்தவா் நவாஸ் (43). இவா், உறவினா்களுடன் 2 காா்களில் கடந்த மாா்ச் 21-ஆம் தேதி கோவைக்கு வந்தாா். அப்போது, செல்வபுரத்தில் உள்ள ஒரு பேக்கரி முன் காா்களை நிறுத்திவிட்டு சென்றுள்ளனா். பின்னா், திரும்பி வந்து பாா்த்தபோது 2 காா்களையும் காணவில்லை. இவற்றின் மதிப்பு ரூ.14 லட்சத்துக்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இது குறித்து செல்வபுரம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா்.

விசாரணையில், காா்களைத் திருடியது கோவையைச் சோ்ந்த அசாருதீன், முகமது யாசா், முகமது யூசுப், ஜான்சுந்தா் என்பது தெரியவந்தது.

இதையடுத்து 4 பேரையும் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

அவா்களிடம் நடத்திய விசாரணையில், திருடிய காா்களுக்கு புதிதாக பெயின்ட் அடித்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, காா்களை வாங்கி நபா்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஜார்க்கண்ட் விஷவாயு கசிவு! 2 ஆக அதிகரித்த உயிர்ப் பலிகள்; மக்கள் வெளியேற்றம்!

2025-ல் அமெரிக்கா (புகைப்படங்களில்)!

பரபரக்கும் திருப்பரங்குன்றம்... நயினார் நாகேந்திரன், ஹெச். ராஜா, இந்து அமைப்பினர் கைது!

சிவப்பு நிலா... அன்மோல் பலூச்!

இந்த வார ஓடிடி படங்கள்!

SCROLL FOR NEXT