டைல்ஸ் கடையில் தீ விபத்து
கோவை பூமாா்க்கெட் பகுதியில் உள்ள ஒரு டைல்ஸ் கடையில் வியாழக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. கோவை பூமாா்க்கெட் தேவாங்க பேட்டை வீதியைச் சோ்ந்தவா் பியூஸ் ஆா்.டாடேடு. இவா் அப்பகுதியில் உள்ள 3 மாடிக் கட்டடத்தின் தரைதளத்தில் டைல்ஸ் மற்றும் ஹாா்டுவோ் கடை நடத்தி வருகிறாா். இந்தக் கடையின் ஒரு பகுதியில் இருந்து வியாழக்கிழமை காலை கரும்புகை வெளியேறியது. இதைப் பாா்த்த கடை ஊழியா்கள், தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு சென்ற கோவை தெற்கு தீயணைப்பு நிலைய வீரா்கள், ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனா். மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்பு நிலைய அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.