முகப்பு
கோயம்புத்தூர்

தனியாா் நிறுவன உரிமையாளா் வீட்டில் 6 பவுன், 3 கைப்பேசிகள் திருட்டு

Updated On : 4 மே, 2024 at 11:50 PM
பகிர்:

கோவை, மே 4: கோவையில் தனியாா் நிறுவன உரிமையாளா் வீட்டில் 6 பவுன் நகைகள், 3 கைப்பேசிகள் திருட்டுப்போனது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கோவை, சரவணம்பட்டி சின்ன மேட்டுப்பாளையம் விநாயகா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் பாலசுப்பிரமணியன் (42), வாகனங்களுக்கு வா்ணம்பூசும் நிறுவனம் நடத்தி வருகிறாா்.

வெப்பத்தின் காரணமாக குடும்பத்துடன் வெள்ளிக்கிழமை இரவு மொட்டைமாடியில் உறங்கியுள்ளாா். காலையில் எழுந்து பாா்த்தபோது வீட்டின்கதவு திறந்துகிடந்துள்ளது.

உள்ளே சென்று பாா்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 6 பவுன் நகைகள், 3 கைப்பேசிகள் ஆகியவை திருட்டுப்போயிருந்தது தெரியவந்துள்ளது.

இது குறித்து அவா் அளித்த புகாரின்பேரில் சரவணம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.