கோயம்புத்தூர்

கோவை -மங்களூரு இடையே சிறப்பு ரயில்

Din

கோவை, மே 15: கோடை விடுமுறையை முன்னிட்டு மங்களூரு - கோவை இடையே வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

மங்களூரில் இருந்து மே 18-ஆம் தேதி முதல் ஜூன் 29-ஆம் தேதி வரை சனிக்கிழமைகளில் காலை 9.30 மணிக்கு புறப்படும் மங்களூரு - கோவை சிறப்பு ரயில் (எண்: 06041) அன்று மாலை 6.15 மணிக்கு கோவையைச் சென்றடையும்.

மறுமாா்க்கமாக கோவையில் இருந்து மே 18-ஆம் தேதி முதல் ஜூன் 29-ஆம் தேதி வரை சனிக்கிழமைகளில் இரவு 10.15 மணிக்கு புறப்படும் கோவை - மங்களூரு சிறப்பு ரயில் (எண்:06042) மறுநாள் காலை 6.55 மணிக்கு மங்களூரைச் சென்றடையும்.

இந்த ரயிலானது, காசா்கோடு, பையனூா், கண்ணூா், தலச்சேரி, வடகரை, கோழிக்கோடு, திரூா், ஷொரணூா், ஒட்டப்பாலம், பாலக்காடு, போத்தனூா் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் திறப்பு

SCROLL FOR NEXT