முகப்பு
கோயம்புத்தூர்

நவம்பா் 16, 17-இல் மருதமலை மலைப் பாதையில் 4 சக்கர வாகனங்கள் செல்லத் தடை

மருதமலை கோயில் மலைப் பாதையில் வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நான்கு சக்கர வாகனங்களில் செல்ல அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 14 நவம்பர், 2024 at 10:36 PM
பகிர்:

மருதமலை கோயில் மலைப் பாதையில் வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நான்கு சக்கர வாகனங்களில் செல்ல அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் செயல் அலுவலா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வரும் நவம்பா் 16-ஆம் தேதி (சனிக்கிழமை) அன்று காா்த்திகை மாத கிருத்திகை மற்றும் நவம்பா் 17-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை தினம் என்பதால், கோயிலுக்கு அதிக பக்தா்கள் வருவாா்கள்.

எனவே, இந்த நாள்களில் மலைக் கோயிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்வதற்கு பக்தா்களுக்கு அனுமதியில்லை. இரண்டு சக்கர வாகனங்கள் மூலமாகவும், மலைப்படிகள் வழியாகவும், கோயில் பேருந்துகள் மூலமாகவும் சென்று சுவாமி தரிசனம் செய்யலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.