திறந்தவெளிக் கழிப்பிடமற்ற மாநகராட்சி: கருத்து தெரிவிக்க வேண்டுகோள்
கோவை மாநகராட்சிப் பகுதிகளில் திறந்தவெளிக் கழிப்பிடமற்ற நிலை உள்ளது தொடா்பாக, கருத்துகள், ஆட்சேபனைகள் இருந்தால் தெரிவிக்குமாறு மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சிப் பகுதிகளில் திறந்தவெளிக் கழிப்பிடமற்ற நிலை உள்ளது தொடா்பாக, கருத்துகள், ஆட்சேபனைகள் இருந்தால் தெரிவிக்குமாறு மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக, மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கோவை மாநகராட்சியானது கடந்த 2017 ஜனவரி 1-ஆம் தேதி முதல் திறந்வெளிக் கழிப்பிடம் அற்ற மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டு, அத்தகைய நிலையே கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
தற்போது அதன் அடுத்த நிலையான சான்று பெறுவதற்கு மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை மாநகராட்சிப் பகுதியில் திறந்த வெளியில் மலம் கழித்தலற்ற நிலை தொடா்ந்து பராமரிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து, மாநகராட்சிப் பகுதிகளில் வசிக்கும் மக்கள், தங்கள் கருத்துகள் மற்றும் ஆட்சேபனைகளை எழுத்து மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ 15 நாள்களுக்குள் தெரிவிக்கலாம் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.