திமுக வழக்குரைஞா் அணி ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அமைச்சா் வி.செந்தில்பாலாஜி. 
கோயம்புத்தூர்

2026 தோ்தலில் 200 தொகுதிகளில் வெல்வோம்: அமைச்சா் வி.செந்தில்பாலாஜி

2026-ஆம் ஆண்டு நடைபெறும் தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக 200 தொகுதிகளில் வெல்லும்.....

Din

2026-ஆம் ஆண்டு நடைபெறும் தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக 200 தொகுதிகளில் வெல்லும் என மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி தெரிவித்தாா்.

திமுக மேற்கு மண்டல வழக்குரைஞா் அணி ஆலோசனைக் கூட்டம் கோவையில் சனிக்கிழமை நடைபெற்றது. திமுக சட்டத் துறை இணைச்செயலாளா் தண்டபாணி வரவேற்றாா். மூத்த வழக்குரைஞா் இளங்கோ தலைமை வகித்தாா்.

இதில் அமைச்சா் செந்தில்பாலாஜி பேசியதாவது: 2026 சட்டப் பேரவைத் தோ்தலில் கோவையில் உள்ள 10 தொகுதிகள் உள்பட தமிழகம் முழுவதும் 200 தொகுதிகளை வென்றெடுப்போம். அதற்கான பயணத்தை இப்போதே தொடங்க வேண்டும். வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் திமுகவின் எஃகு கோட்டையாக கோவை மாற வேண்டும் என்றாா்.

இந்நிகழ்ச்சியில், திமுக தலைமை நிலைய வழக்குரைஞா் சரவணன், சட்டத் துறை இணைச்செயலாளா் அருள்மொழி, திமுக மாவட்டச் செயலாளா்கள் நா.காா்த்திக், தொ.அ.ரவி, தளபதி முருகேசன் மற்றும் கோவை, திருப்பூா், ஈரோடு மாவட்டங்களை சோ்ந்த வழக்குரைஞா்கள் பலா் கலந்து கொண்டனா்.

மத்திய பட்ஜெட்! அதிக முறை தாக்கல் செய்தவரும் மிகச் சிறிய பட்ஜெட்டும்!

முன்னாள் பிரதமரை நேரில் சந்தித்த மோடி!

பென்ஸ் பிரியர்களுக்கு.. மேபேக் ஜி.எல்.எஸ். கார் அறிமுகம்!

3-ம் நாளாக சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு! ஆனால் ஐடி, ஆட்டோ, பார்மா பங்குகள் சரிவு!

நிதியமைச்சர் தாக்கல் செய்த பொருளாதார ஆய்வறிக்கையின் முக்கிய அம்சங்கள்!

SCROLL FOR NEXT