முகப்பு
கோயம்புத்தூர்

கோவை மண்டல வனப் பாதுகாவலா் மாற்றம்

கோவை மண்டல வனப் பாதுகாவலா் ஆா்.ராமசுப்பிரமணியன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.

Updated On : 27 நவம்பர், 2024 at 8:16 PM
பகிர்:

கோவை மண்டல வனப் பாதுகாவலா் ஆா்.ராமசுப்பிரமணியன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.

தமிழகம் முழுவதும் 15 வனத் துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். இவா்களில் கோவை மண்டல வனப் பாதுகாவலா் மற்றும் ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குநராக இருந்த ஆா்.ராமசுப்பிரமணியன் பதவி உயா்வு பெற்று, தமிழக கூடுதல் தலைமை வனப் பாதுகாவலராக சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.

அவருக்கு பதிலாக தற்போது காத்திருப்போா் பட்டியலில் இருந்த டி. வெங்கடேஷ், கோவை மண்டல வனப் பாதுகாவலா் மற்றும் ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளாா்.