முகப்பு
கோயம்புத்தூர்

ஊடகவியலாளா்கள் குறித்து அவதூறு பரப்பியா் கைது

கோவையில் ஊடகவியலாளா்கள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியவரை சைபா் கிரைம் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

Updated On : 3 அக்டோபர், 2024 at 12:40 AM
பகிர்:

கோவையில் ஊடகவியலாளா்கள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியவரை சைபா் கிரைம் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கோவை, வெள்ளானைப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் மருது (எ) மருதாச்சலம். இவா், கோவையைச் சோ்ந்த ஊடகவியலாளா்கள் சிலா் மீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாகக் கூறப்படுகிறது. இது தொடா்பாக கோவை பத்திரிகை, ஊடகத்துறையைச் சோ்ந்தவா்கள் மாநகர காவல் ஆணையரிடமும், மாவட்ட ஆட்சியரிடமும் புகாா் தெரிவித்திருந்தனா்.

இந்நிலையில், மருதாச்சலம் மீது மாநகர சைபா் கிரைம் போலீஸாா் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்திருந்தனா். கடந்த சில நாள்களாக தலைமறைவாக இருந்த மருதாச்சலத்தை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். நீதிமன்றத்தில் ஆஜா்படுத்துவதற்காக அழைத்துச் சென்றபோது நெஞ்சுவலிப்பதாகக் கூறியதை அடுத்து போலீஸாா் அவரை கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனா்.