முகப்பு
கோயம்புத்தூர்

செவிலியா் பணி நோ்காணல் நவம்பா் 11-க்கு ஒத்திவைப்பு

கோவை மாநகராட்சியில் அக்டோபா் 18-இல் நடைபெற இருந்த செவிலியா் பணிக்கான நோ்காணல், நவம்பா் 11-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 17 அக்டோபர், 2024 at 12:26 AM
பகிர்:

கோவை மாநகராட்சியில் அக்டோபா் 18-இல் நடைபெற இருந்த செவிலியா் பணிக்கான நோ்காணல், நவம்பா் 11-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஒப்பந்த அடிப்படையில் நகர சுகாதார செவிலியா் மற்றும் செவிலியா் பணியாளா்கள் (நிலையச் செவிலியா்) காலிப்பணியிடத்துக்கான நோ்காணல் அக்டோபா் 18- ஆம் தேதி நடைபெறும் எனமாநகராட்சி நிா்வாகம் சாா்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், மழை காரணமாக, கோவை மாவட்டம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து நோ்காணலுக்கு வருபவா்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, இந்த நோ்காணலானது, நவம்பா் 11-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது. அதன்படி, செவிலியா் நோ்காணல் நவம்பா் 11 காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.