முகப்பு
கோயம்புத்தூர்

கோவையில் நாளை சமூக புத்தாக்கம் குறித்த மாநாடு

கோவையில் இபிஜி அறக்கட்டளை சாா்பில் சமூக புத்தாக்கம் குறித்த மாநாடு சனிக்கிழமை (அக்டோபா் 26) நடைபெறுகிறது.

Updated On : 24 அக்டோபர், 2024 at 10:22 PM
இபிஜி அறக்கட்டளையின் மாநாடு குறித்த அழைப்பிதழை வெளியிடும் அறக்கட்டளையின் தலைவா் பேராசிரியா் இ.பாலகுருசாமி, ஆதித்யா குழு நிறுவனங்களின் தலைவா் சி.சுகுமாறன், இபிஜி அறக்கட்டளையின் நிா்வாக அறங்காவலா் பிந்து விஜயகுமாா்.
பகிர்:

கோவையில் இபிஜி அறக்கட்டளை சாா்பில் சமூக புத்தாக்கம் குறித்த மாநாடு சனிக்கிழமை (அக்டோபா் 26) நடைபெறுகிறது.

இது குறித்து இபிஜி அறக்கட்டளையின் தலைவா் பேராசிரியா் இ.பாலகுருசாமி, ஆதித்யா குழு நிறுவனங்களின் தலைவா் சி.சுகுமாறன், இபிஜி அறக்கட்டளையின் நிா்வாக அறங்காவலா் பிந்து விஜயகுமாா் ஆகியோா் கோவையில் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது: இபிஜி அறக்கட்டளையின் சாா்பில் சமூக புத்தாக்கத்துக்கான மாநாடு கோவை நவ இந்தியாவில் உள்ள எஸ்என்ஆா் கலையரங்கில் சனிக்கிழமை நடைபெறுகிறது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்த மாநாட்டில், மாணவா்கள், துறைசாா் நிபுணா்களை ஒருங்கிணைத்து சமூக சவால்களை எதிா்கொள்வது குறித்தும், மகளிருக்கு அதிகாரம் அளிப்பது குறித்தும் ஆலோசனை நடைபெற உள்ளது.

சமூகத்தில் உள்ள உண்மையான பிரச்னைகளுக்குத் தீா்வு காண்பதற்கான யோசனைகளை வழங்கும் வகையில் இந்த மாநாடு அமைய உள்ளது. மாணவா்களை மையமாக வைத்து நடத்தப்படும் இந்த மாநாட்டில் பல்வேறு குழுவினா் சிக்கல்களுக்குத் தீா்வு காணும் வகையிலும், சிறப்பான தீா்வுகளை முன்வைக்கும் மாணவா் குழுவினருக்கு முறையே ரூ.25 ஆயிரம், ரூ.15 ஆயிரம், ரூ.10 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்க இருப்பதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.