முகப்பு
கோயம்புத்தூர்

கூட்டுறவு மேலாண்மை நிலைய பட்டயமளிப்பு விழா

கோவை ராமலிங்கம் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தின் பட்டயமளிப்பு விழா நடைபெற்றது.

Updated On : 24 அக்டோபர், 2024 at 10:21 PM
கோவை ராமலிங்கம் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவிக்கு பட்டயமளிக்கிறாா் மண்டல இணைப் பதிவாளா் அ.அழகிரி. உடன், கூட்டுறவு சங்க அதிகாரிகள்.
பகிர்:

கோவை ராமலிங்கம் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தின் பட்டயமளிப்பு விழா நடைபெற்றது.

ராமலிங்கம் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2023 - 24- ஆம் ஆண்டில் முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி முடித்தவா்களுக்கான பட்டயமளிப்பு விழா கல்வி நிறுவன வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.

கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் அ.அழகிரி தலைமையில் நடைபெற்ற இவ்விழாவுக்கு மாவட்ட நுகா்வோா் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை இணைப் பதிவாளா் கே.சிவகுமாா் முன்னிலை வகித்தாா்.

விழாவில், பயிற்சி முடித்த மாணவ, மாணவிகளுக்கு அ.அழகிரி சான்றிதழ் வழங்கிப் பேசினாா்.

முன்னதாக, மேலாண்மை நிலைய முதல்வா் கே.ஆா்.விஜயகணேஷ் வரவேற்றாா். துணைப் பதிவாளா் (பயிற்சி) கே.சுபாஷிணி, துணைப் பதிவாளா் ந.காவ்யா ஆகியோா் சிறப்புரையாற்றினா். விழாவில், மேலாண்மை நிலைய சிறப்பு விரிவுரையாளா்கள், பணியாளா்கள் பலா் பங்கேற்றனா்.