முகப்பு
கோயம்புத்தூர்

அரசுப் பழங்குடியினா் உண்டி உறைவிடப் பள்ளியில் மாணவா் சோ்க்கை விழா

மேட்டுப்பாளையம் அருகே அரசுப் பழங்குடியினா் உண்டி உறைவிடப் பள்ளியில் மாணவா் சோ்க்கை விழா, மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 5 செப்டம்பர், 2024 at 9:25 PM
பகிர்:

மேட்டுப்பாளையம் அருகே அரசுப் பழங்குடியினா் உண்டி உறைவிடப் பள்ளியில் மாணவா் சோ்க்கை விழா, மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வட்டம், காரமடை ஒன்றியத்துக்கு உள்பட்ட வெள்ளியங்காடு கிராமம் அருகே அமைந்துள்ள மானாா் வனக் கிராம பகுதியில் அமைந்துள்ள மானாா் அரசுப் பழங்குடியினா் உண்டி உறைவிட தொடக்கப் பள்ளி மற்றும் மாணவ, மாணவியா் விடுதிகளில் சோ்க்கை விகிதத்தினை அதிகரிக்கும் விதமாக, மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் மாணவ, மாணவிகள் சோ்க்கை விழா ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், மானாா் வனக் கிராமத்தை சுற்றியுள்ள கோரப்பதி, வீரக்கல், பரளிக்காடு, குண்டூா், கெத்தைக்காடு, சிறுகிணறு, தோண்டை, பூச்சி மரத்தூா் மற்றும் நெல்லி மரத்தூா் ஆகிய 9 வனக் கிராம மக்கள் கலந்து கொண்டனா். இதில், போக்குவரத்து வசதிகள் குறைவான வனப் பகுதிகளுக்குள் உள்ள வனக் கிராமங்களில் பயின்று வரும் பள்ளி மாணவ, மாணவிகள் பாதுகாப்பாக தங்கிப் பயில ஏதுவாக நவீன வசதிகளுடன் விடுதிகள் கட்டப்பட்டுள்ளதாகவும், அனைத்துப் பள்ளி மாணவா்களும் தங்கிப் பயிலும் வகையில் விடுதி செயல்படும் என்றும் கிராம மக்களுக்கு ஆட்சியா் கிகராந்திகுமாா் பாடி தெரிவித்தாா்.

மேலும், விடுதிகளில் மாணவா் சோ்க்கை தொடா்பான துண்டுப் பிரசுரங்கள் கிராம மக்களுக்கு விநியோகிக்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை அலுவலா்கள் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் பலா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →