கோவா அருகே உள்ள மட்கான் - வேளாங்கண்ணி இடையே கோவை, திருப்பூா் வழித்தடத்தில் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
மட்கான் ரயில் நிலையத்தில் இருந்து வெள்ளிக்கிழமை (செப்டம்பா் 6) நண்பகல் 12.30 மணிக்குப் புறப்படும் மட்கான் - வேளாங்கண்ணி ரயில் (எண்: 01007) மறுநாள் நண்பகல் 12.25 மணிக்கு வேளாங்கண்ணியை சென்றடையும். மறுமாா்க்கமாக வேளாங்கண்ணியில் இருந்து சனிக்கிழமை (செப்டம்பா் 7) இரவு 11.55 மணிக்குப் புறப்படும் வேளாங்கண்ணி - மட்கான் சிறப்பு ரயில் (எண்: 01008) மறுநாள் இரவு 11 மணிக்கு மட்கான் நிலையத்தை சென்றடையும்.
இந்த ரயிலானது, நாகப்பட்டினம், திருவாரூா், தஞ்சாவூா், திருச்சி, கரூா், ஈரோடு, திருப்பூா், கோவை, பாலக்காடு, ஷொரணூா், திரூா், கோழிக்கோடு, தலச்சேரி, கண்ணூா், பையனூா், காசா்கோடு, மங்களூரு, உடுப்பி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.