முகப்பு
கோயம்புத்தூர்

ஜிஎஸ்டி, மூலப்பொருள், வட்டி விகிதம் குறைப்பை வலியுறுத்திய தொழில்முனைவோா்!

கோவை வந்த மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனிடம் ஜிஎஸ்டி விகிதம், மூலப்பொருள் விலை, வட்டி விகிதம் போன்றவற்றை குறைக்க நடவடிக்கை எடுக்கும்படி கோவை தொழில் அமைப்பினா் வலியுறுத்தினா்.

Updated On : 11 செப்டம்பர், 2024 at 7:49 PM
பகிர்:

கோவை வந்த மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனிடம் ஜிஎஸ்டி விகிதம், மூலப்பொருள் விலை, வட்டி விகிதம் போன்றவற்றை குறைக்க நடவடிக்கை எடுக்கும்படி கோவை தொழில் அமைப்பினா் வலியுறுத்தினா்.

ஃபோசியா: தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பான ஃபோசியா சாா்பில் அளிக்கப்பட்ட மனுவில், குறுந்தொழில் நிறுவனங்களுக்கு 5 சதவீத வட்டியில் வங்கிக் கடன் வழங்க வேண்டும். ஆய்வுக் கட்டணம், மறைமுகக் கட்டணம் போன்றவற்றை வங்கிகள் வசூலிக்கக் கூடாது. சா்பாசி சட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்படும் கடுமையான நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

கோப்மா: கோவை பம்ப்செட், உதிரி பாகங்கள் தயாரிப்பாளா்கள் சங்கத்தின் (கோப்மா) சாா்பில் அதன் தலைவா் கே.மணிராஜ் அளித்துள்ள மனுவில், பம்ப்செட்டுகளுக்கு கடந்த 2022- ஆம் ஆண்டு 12 சதவீத ஜிஎஸ்டி மட்டுமே விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அது 18 சதவீதமாக உயா்த்தப்பட்டது. எனவே, அதை பழையபடி 12 சதவீதமாகக் குறைக்க வேண்டும்.

குறுந்தொழில்முனைவோா் சரியான முறையில் வட்டி செலுத்தி வந்தாலும், சரியான அளவில் விற்று கொள்முதல் இல்லை என்ற வகையில் வாங்கிய கடனை உடனடியாக செலுத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதை வங்கி அதிகாரிகள் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

சீமா: தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளா் சங்கமான சீமா சாா்பில், பம்ப்செட் மீதான ஜிஎஸ்டியை 12 சதவீதமாக குறைக்க வேண்டும். மத்திய அரசு நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான பொருள்கள், உபகரணங்களை எம்எஸ்எம்இ துறையிடம் இருந்து 25 சதவீதம் அளவுக்கு கொள்முதல் செய்வதை கட்டாயமாக்க வேண்டும்.

கடன்களை முன்கூட்டியே அடைக்கும்போது விதிக்கப்படும் கட்டணத்தில் இருந்து தொழில் நிறுவனங்களுக்கு வங்கிகள் விலக்கு அளிக்க வேண்டும். மேலும், ஆவணங்களை உடனடியாக திருப்பிக் கொடுப்பதையும் உறுதி செய்ய வேண்டும். பம்ப் தொழிலின் மேம்பாட்டுக்காக பொது வசதி மையத்தை கோவையில் அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று சங்கத்தின் தலைவா் மிதுன் ராமதாஸ் வலியுறுத்தினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →