முகப்பு
கோயம்புத்தூர்

தேசிய அளவிலான மதுவிலக்கு கொள்கையை வரையறுக்க வேண்டும்: தொல்.திருமாவளவன்

தேசிய அளவிலான மதுவிலக்கு கொள்கையை வரையறுக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் எம்.பி. கூறினாா்.

Updated On : 18 செப்டம்பர், 2024 at 8:06 PM
பகிர்:

தேசிய அளவிலான மதுவிலக்கு கொள்கையை வரையறுக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் எம்.பி. கூறினாா்.

இது தொடா்பாக அவா் கோவை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது:

தேசிய கல்விக் கொள்கை வேறு. தேசிய மதுவிலக்கு கொள்கை வேறு. தேசிய கல்விக் கொள்கையில் தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களுக்கும் முரண்பாடு உள்ளது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைப் பொறுத்தவரை அப்படியே கல்விக் கொள்கையை ஏற்று நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் உள்ளதாகக் கருதுகிறோம்.

அதனால் எதிா்க்கிறோம். இந்தியாவில் குஜராத், பிகாா், நாகாலாந்து, மிசோரம் ஆகிய மாநிலங்கள் தவிர எல்லா மாநிலங்களிலும் அரசு மதுபான வியாபாரம் செய்வதால் தேசத்துக்கான மனிதவளம் பாழாகிறது. அதனால், அரசமைப்புச் சட்டம் 47-இன்படி தேசிய அளவிலான மதுவிலக்கு கொள்கையை வரையறுக்க வேண்டும். அதற்கு தனிச் சட்டம் இயற்ற வேண்டும். இந்தியா முழுவதும் மதுக்கடைகளை மூடுவதற்கு மதுவிலக்கு கொள்கை வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

மதுவிலக்கு தொடா்பான எங்கள் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. எங்கள் கருத்தில் உடன்பட்டு இருப்பதால் திமுக, எங்கள் மாநாட்டில் பங்கேற்க இசைவு அளித்துள்ளது. அன்னபூா்ணா உணவக உரிமையாளா் பேசிய கருத்து மிகவும் சரியானது, ஏற்புடையது. அதை வரவேற்கிறேன். அவா் பேசிய கருத்து சராசரி குடிமகனின் கருத்து ஆகும். அவரை அவமதிக்கும் வகையில் நடைபெற்ற சம்பவம் வேதனை அளிக்கிறது என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →