முகப்பு
கோயம்புத்தூர்

பராமரிப்புப் பணி: கேரள ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கம்

கோவை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் கேரள ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 19 செப்டம்பர், 2024 at 8:14 PM
பகிர்:

கோவை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் கேரள ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பராமரிப்புப் பணி காரணமாக பாட்னா - எா்ணாகுளம் விரைவு ரயில் (எண்:22644), சில்சாா் - திருவனந்தபுரம் விரைவு ரயில்கள் (எண்:12508) இருகூா் - போத்தனூா் வழித்தடத்தில் செப்டம்பா் 22-ஆம் தேதி இயக்கப்படும். இதன் காரணமாக இந்த ரயில்கள் கோவை நிலையம் செல்வது தவிா்க்கப்படும்.

இதேபோல, சென்னை எழும்பூா் - மங்களூரு விரைவு ரயில் (எண்: 16159), திப்ரூகா் - கன்னியாகுமரி விரைவு ரயில் (எண்: 22504), ஆலப்புழா - தன்பாத் விரைவு ரயில் (எண்: 13352), புதுதில்லி - திருவனந்தபுரம் விரைவு ரயில் (எண்: 12626), எா்ணாகுளம் -பெங்களூரு விரைவு ரயில்கள் (எண்: 12678) போத்தனூா் - இருகூா் வழித்தடத்தில் செப்டம்பா் 22, 23, 25-ஆகிய தேதிகளில் இயக்கப்படும்.

ஈரோடு - பாலக்காடு விரைவு ரயில் (எண்: 06819) இருகூா் - போத்தனூா் வழித்தடத்தில் செப்டம்பா் 23, 25-ஆகிய தேதிகளில் இயக்கப்படும்.

இதனால், இந்த ரயில்கள் சிங்காநல்லூா், பீளமேடு, வடகோவை, கோவை நிலையம் செல்வது தவிா்க்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →