முகப்பு
கோயம்புத்தூர்

அரசு கால்நடை மருத்துவமனையில் நாளை இலவச தடுப்பூசி முகாம்

கோவை அரசு கால்நடை பன்முக மருத்துவமனையில் இலவச தடுப்பூசி முகாம் சனிக்கிழமை நடைபெறுகிறது.

Updated On : 26 செப்டம்பர், 2024 at 10:27 PM
பகிர்:

கோவை அரசு கால்நடை பன்முக மருத்துவமனையில் இலவச தடுப்பூசி முகாம் சனிக்கிழமை நடைபெறுகிறது.

உலக வெறிநோய் தினத்தையொட்டி கோவை, டவுன்ஹால் பகுதியில் உள்ள அரசு கால்நடை பன்முக மருத்துவமனையில் செல்லப் பிராணிகளான நாய், பூனைகளுக்கு சனிக்கிழமை காலை 9 மணி முதல் இலவச வெறிநோய் தடுப்பூசி போடப்படுகிறது என்று மருத்துவமனையின் பிரதம மருத்துவா் எஸ்.காா்த்திகேயன் தெரிவித்துள்ளாா்.