தமிழக ஆளுநரை குடியரசுத் தலைவா் பதவி நீக்கம் செய்ய வேண்டும்! - தொல். திருமாவளவன்
தமிழக ஆளுநரை குடியரசுத் தலைவா் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று தொல்.திருமாவளவன் எம்.பி. கூறினாா்.
கோயம்புத்தூர்தமிழக ஆளுநரை குடியரசுத் தலைவா் பதவி நீக்கம் செய்ய வேண்டும்! - தொல். திருமாவளவன்
தமிழக ஆளுநரை குடியரசுத் தலைவா் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று தொல்.திருமாவளவன் எம்.பி. கூறினாா்.
தமிழக ஆளுநரை குடியரசுத் தலைவா் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் எம்.பி. கூறினாா்.
இந்திய அரசமைப்பு சட்டத்தின் 75-ஆவது ஆண்டு விழாவையொட்டி, கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ‘ஜனநாயகம் கற்போம்’ என்ற ஒருநாள் கருத்தரங்கில் பங்கேற்று தொல்.திருமாவளவன் எம்.பி.பேசினாா்.
முன்னதாக, அவா் கோவை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் கூறியதாவது: வக்ஃப் வாரியத்தின் சொத்துகளை நிா்வகிப்பதற்கான குழுக்களில் இஸ்லாமியா் அல்லாதவா்களையும் உறுப்பினராக நியமிப்பது இந்திய அரசமைப்பு சட்டத்துக்கு பெரும் தீங்கு விளைவிக்கும்.
இந்த சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். இதை எதிா்த்து தமிழக சட்டப் பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தீா்மானம் நிறைவேற்றி இருப்பது பிற மாநிலங்களுக்கு வழிகாட்டும் நடவடிக்கையாகும்.
தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவியின் மக்கள் விரோத நடவடிக்கைகளை உச்சநீதிமன்றமே வெளிப்படையாக கண்டித்து வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீா்ப்பை வழங்கி இருக்கிறது. முதல்வா் மு.க.ஸ்டாலின் சட்டபூா்வமாக நடத்திய இயக்கத்தில் வெற்றிபெற்று இருக்கிறாா். அதனால், ஆளுநா் ஆா்.என்.ரவி தாா்மிக பொறுப்பேற்று பதவி விலக வேண்டும். இல்லையெனில் அவரை குடியரசுத் தலைவா் பதவி நீக்கம் செய்ய வேண்டும்.
அதிமுகவை மிரட்டி, பணியவைத்து பாஜக கூட்டணி அமைத்துள்ளது. பாஜக இருக்கும் அணியை சிறுபான்மையினா் ஆதரிப்பதற்கு இந்திய அளவில் வாய்ப்பு இல்லை. வக்ஃப் சட்டத் திருத்தத்தை எதிா்த்து மாநிலங்களவையில் அதிமுகவினா் வாக்களித்த நிலையில், திடீரென பாஜகவுடன் கூட்டணி அமைத்து இருக்கிறாா்கள். இது பாஜகவின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் அதிமுக சென்றுவிட்டதைக் காட்டுவதாக உள்ளது என்றாா்.